Grow Organic · Live Natural
உங்கள் மண் அமிலத்தன்மை நிறைந்ததா அல்லது காரத்தன்மை நிறைந்ததா என்று கண்டுபிடிக்க சில வழிகள்.
முதலில் ஏன் இதை கண்டுபிடிக்க வேண்டும் இதன் மகத்துவம் என்ன என்று பார்க்கலாம் மண்களில் இந்த அமிலத்தன்மை அல்லது காரத்தன்மை சரியான அளவில் இல்லாவிட்டால் தேவையான ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு சென்று சேராது.
வேர்கள் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் உதவிகொண்டு இந்த ஊட்டச்சத்துகளை உண்கிறது இந்த அமிலத்தன்மை அல்லது காரத்தன்மையும் சரியாக இல்லாவிட்டால் செடிகள் சத்துக்களை உண்ணுவது கடினமாகிவிடும்.
இந்த பரிசோதனை செய்து பார்க்க உங்களுக்கு தேவையான பொருள்கள்:
செய்முறை:
நீங்கள் எந்த தொட்டியில் பரிசோதனை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த தொட்டியில் இருந்து 2 கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டும் தனித்தனி கப்பில் எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவு கப்பில் வினிகர் ஊற்றிக் கொள்ளுங்கள். மற்றொரு கப்பில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். இரண்டு டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடா எடுத்து ஒரு கப்பில் வைத்துக்கொள்ளுங்கள். மொத்தம் 5 கப்.
முதல் கப் மண்ணில் வினிகரை ஊற்றி கிளறிவிடுங்கள். சிறிது நேரத்தில் அந்த மண் கொப்பளித்தது போல வந்தாள் உங்கள் மண் காரத்தன்மை உடன் இருக்கிறது என்று அர்த்தம்.
- Gardening Tray Guide: Best Trays for Seed Starting, Repotting & Terrace Drainage
- Essential Gardening Tools Every Terrace Gardener Needs (2026 Buying Guide)
- Rooftop Gardening in India: Complete Setup Guide (Safety, Waterproofing & Layout)
- Natural Skincare from Your Garden: DIY Herbal Bath & Beauty Recipes
- 7 Common Terrace Gardening Mistakes (And How to Fix Them)
வினிகர் ஊற்றியும் கொப்பளித்தது போல வரவில்லை என்றாள் அடுத்த கப்பை எடுத்துக் கொள்ளுங்கள். நாம் வைத்திருக்கும் இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா உடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு திரவமாக ஆக்கிக்கொள்ளுங்கள்.
அந்த திரவத்தை இரண்டாவது சோதனை மண்ணில் ஊற்றி கேலரி பாருங்கள். இப்பொழுது உங்கள் மணி பொங்கி வந்தது என்றால் கொப்பளித்தது போல தெரிந்தால் உங்கள் மண் அமிலத்தன்மை நிறைந்தது என்று அர்த்தம்.
இந்த எளிய சோதனை மூலம் உங்கள் மண் எந்த தன்மை கூடியது என்று ஓரளவு தெரிந்து கொள்ளலாம். இது எதற்கு உதவியாக இருக்கும் என்று கேட்டீர்கள் என்றால்? ஒவ்வொரு செடியும் ஒரு ஒரு தன்மை உடையது சில செடிகளுக்கு காரத்தன்மை நிறைந்த மண் பிடிக்கும் சில செடிகளுக்கு அமிலத்தன்மை நிறைந்த மண் பிடிக்கும்.
இது தெரிந்தது மண்ணை நாம் சரி செய்தோம் என்றால் செடிகளின் வளர்ச்சி அற்புதமாக இருக்கும். எந்தெந்த செடி எந்தெந்த அமிலத்தன்மை சதவீதத்தில் இருக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் கொடுத்துள்ளேன் அந்த கட்டுரையையும் படித்துப் பாருங்கள் இதுபோல மேலும் பயனுள்ள கட்டுரைகளை படிக்க கீழுள்ள விண்ணப்பத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். புதிதாக கட்டுரைகள் வரும்போது உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பப்படும். இப்போது கொடுக்கப்பட்ட தகவல் அனைத்தும் தெளிவாக ஒரு வீடியோ வடிவில் நான் பதிவு இட்டுள்ளேன். அதையும் பார்த்து பயனடையுங்கள். நன்றி.!!
https://youtu.be/72AgoKebPIUhttps://sako.co.in/?p=6973


