நீங்கள் மாடித் தோட்டத்திற்கு புதுசா ? எந்த காய் போட்டாலும் வரமாட்டேங்குது! என்று கவலைப்படுகிறீர்களா ? உங்களுக்கான சில அடிப்படை மாடித்தோட்ட டிப்ஸ் சொல்கிறேன்!!.
மண் கலவை, விதையின் தரம, நீங்கள் செடியை வைக்கும் இடம், இவை மூன்றும் மிக முக்கியம்.
மண் கலவை தரமாக இருந்தால் 40% நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். விதை தரமாக இருந்தால் 20 சதவீதம் வெற்றியை நீங்கள் அடைந்து விட்டீர்கள். செடி சரியான தட்பவெட்ப சூழ்நிலையில் நீங்கள் வைத்துவிட்டாள் மீதம் ஒரு 20% ஜெயித்து விட்டீர்கள். மீதி இருக்கும் 20 சதவீதம் பூச்சி தாக்குதல் மற்றும் இயற்கை சீற்றத்தால் வரும் பாதிப்புகள் அதை நம் சூழலுக்கு ஏற்றவாறு சரி செய்து கொள்ளலாம்.
நீங்கள் என்ன மண்கலவை வேணாலும் எடுத்துக்கொள்ளலாம் அதில் குறைந்தது 30% இயற்கை உரம் இருக்க வேண்டும். நல்ல தரமான நாட்டு விதைகளை நம்பிக்கையான இடத்தில் வாங்கிக் கொள்ளுங்கள். குறைந்தது 4 முதல் ஆறு மணி நேரம் சூரிய வெளிச்சம் வரும் இடத்தில் செடியை வைத்துக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் பாதிக்குமேல் ஜெயித்த மாதிரி.
எப்படி விதைப்பது, எப்படி நாத்து போட்டு எடுப்பது என்று பல வீடியோக்கள் உங்களுக்காக பதிவு செய்து உள்ளேன். எந்த நேரத்தில் பூச்சித்தாக்குதல் இருக்கும்? எந்த பயிர் ஊக்கி விலை மலிவாக சிக்கனமாக மிக ஆற்றலுடன் செடிக்கு சத்துக்களை கொண்டு சேர்க்கும் என்று பல வீடியோக்கள் பதிவு செய்து உள்ளேன். அதையெல்லாம் நமது யூட்யூப் வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம். ஒரு விஷயம் நண்பர்களே!! தோட்டம் அமைப்பது என்பது மற்றவர் கூறிவருவது அல்ல. உங்கள் அனுபவத்தில் நீங்கள் கற்றுக்கொள்வது இந்தக் கட்டுரை எனது அனுபவத்தில் நான் கூறியுள்ளது இதை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு ஒரு அனுபவம் கிடைக்கும் .அதுவே உங்களுக்கு பாடமாகும். அந்தப் பாடத்தின் அடிப்படையில் உங்கள் தோட்டத்தை அமைக்க ஆரம்பியுங்கள். வெற்றி உங்களுக்கே!
http://sako.co.in/?p=994