நிலாவிலும் செய்யலாம் விவசாயம்!!

இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. நிலாவில் நாம் தரையிறங்க.  நமது Lander எனக்கூறப்படும் Vikranth கருவி இன்று (07.09.2019) இரவு 01:30am  மணி அளவில் நிலாவில் இறங்க உள்ளது. இது இந்திய வரலாற்றில் மட்டும் இல்லாமல் உலக வரலாற்றிலும் ஒரு மைல்-கல். சந்திராயன் 2 மிகக் குறைந்த செலவில் மிகத்துல்லியமாக இலக்கை சென்று அடையும் வகையில் வடிவமைத்துள்ளனர் நமது விஞ்ஞானிகள். 

சந்திராயன் 2 இந்திய நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலம். இதன் பாகங்கள், பராமரிப்புகள், மற்றும் செயல்பாடுகள், அனைத்துமே இந்திய விஞ்ஞானிகள் மூலம் கண்டுபிடித்து, ஆராய்ந்து, செயல்படுத்தியது ஆகும். இந்தியனாக இதை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன், வரும் நாட்களில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தில் இந்தியா உள்ளது. அதாவது 2022ஆம் ஆண்டு நிலவிற்கு மனிதனை அனுப்பும் திட்டங்களை இந்தியா வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. 



எனது ஆசையெல்லாம் நிலாவில் ஒரு சிறிய துளசிச்செடி யாவது வளர்த்து பாக்கணும் என்பதுதான். கண்டிப்பாக என் ஆசை நிறைவேறும் என்று நம்புகிறேன்.  ஏன் நிலாவில் மட்டும் செவ்வாய் கிரகத்திலும் நடக்கட்டும். விரைவில் மங்கல்யான் 2 செவ்வாய் கிரகத்தை ஆராய ஒரு விண்கலம் வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயம் நாடு செழிக்க மட்டும் அல்ல, மண் செழிக்க இயற்கை சூழல் உருவாக ஒரு பெரிய பங்களிக்கிறது. விரைவில் நிலவிலும் தக்காளி வெண்டைக்காய் விளையும் என நம்புகிறேன். இஸ்ரோ ( I S R O ) விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். நிலாவை காட்டி சோறூட்டிய காலம் போய் நிலாவுக்கு சென்று சாப்பிட்டு வரும் காலம் மிக விரைவில் வரலாம்.



http://sako.co.in/?p=965

Shopping Cart