இந்த மாதம் மாடி தோட்டத்தில் என்ன விதைக்கலாம் என்று பார்க்கலாம்.
இது ஒரு வசந்த காலம் இந்த நேரத்தில் மாடித்தோட்டத்தில் அனைத்து வகையான காய்கறிகளும் பழங்களும் பூக்களும் பூத்தும் காய்த்து குலுங்கும்.
வெண்டை கத்தரி கொத்தவரங்காய் செடி காராமணி கொடி அவரை மொச்சை பாகள் புடலங்காய் பீர்க்கங்காய் சுரக்காய் சிகப்பு காராமணி சிகப்பு வெண்டைக்காய் குடைமிளகாய் பச்சை மிளகாய் போன்ற அனைத்து காய்களும் செழுமையாக வரும்.
இதுபோல மண்ணுக்கு கீழே விளையும் மஞ்சள் இஞ்சி பூண்டு வெங்காயம் முள்ளங்கி கேரட் பீட்ரூட் போன்ற தாவரங்களும் அருமையாக வளரும்.
மல்லிகைப்பூ அதிலும் நித்தியமல்லி ஜாதிமல்லி அருமையாக பூப்பூக்கும் செம்பருத்தி அடிக்கடி பூத்துக் கொண்டே இருக்கும் அதுமட்டுமல்ல காஸ்மோஸ் ( Cosmos ) மேரி கோல்ட் ( mari gold ) zinnia பால்சம் போன்ற பூச்செடிகளும் அருமையாக பூத்துக்குலுங்கும். எல்லாருக்கும் பிடித்த ரோஜா செடியும் பூக்கள் அதிகம் பூத்துக் குலுங்கும்.
சரியான நேரத்தில் உரம் மற்றும் பராமரிப்பு செய்து வந்தால் ஒரு பெரிய அறுவடையை மாடித்தோட்டத்தில் அல்லது வீட்டு தோட்டத்தில் நீங்கள் எடுக்கலாம். இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். இதுபோல கட்டுரைகளைப் படிக்க சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள் எங்களது மின்-அஞ்சல் சேவைக்கு . மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.http://sako.co.in/?p=958